Header Ads

Header ADS

கூந்தல் பராமரிப்பு

தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காயை அரைத்து பால் எடுத்து தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தலை முடி வளர, அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.

முடி கொட்டுவதை நிறுத்த, தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும்.

குளிக்கும் போது கவனிக்கவேண்டியவை:





1.ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்து கொள்ளகூடாது.அப்படி செய்தால் தலையில் அப்பிக்கொள்ளும்

2.தினமும் ஷாம்பூ போட்டு குளித்தால் நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை வந்துவிடும்
3,தலைகுளிக்கும் போது ஷாம்பூவை தலையில் அப்படியே வைத்து தேய்க்க கூடாது.சிறிதளவு தண்ணீர் உற்றி கலக்கிய பிறகு தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.இப்படி செய்தால்தான் நீங்க எதிர் பார்க்கற நல்ல பலனை பெறமுடியும்.இல்லையேல் ஆபத்து தான் தலைமுடிக்கு விளையும்
கூந்தல் பராமரிப்புக்காக மேலும் சில டிப்ஸ்:

1.என்னதான் அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக்கூடாது.டவலால் நன்கு துடைத்து ஈரம் போய் தலைமுடி காய்ந்த பின்பு நல்ல தரமான சீப்புகளால் தலைசீவ வேண்டும்

2.வாரம் இரண்டு முறையாவது தலை குளிக்க வேண்டும்

3.மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்

4.இரவு படுக்கும்முன் கூந்தலை மென்மையாக வாரிவிட்டு படுக்க வேண்டும்.இது தலைமுடி நன்கு வளர உதவும்

5.அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல வேண்டுமானால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே உபயோகிக்கலாம்

6.கூந்தலை ப்ளீச் செய்வது கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. இல்லையெனில் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

No comments

உங்கள் கருத்துக்கள்:

Powered by Blogger.