நகங்களை பாதுகாப்பது எப்படி?
* நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்குகாரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்டு நோய் போன்றவற்றின்அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.
* நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறைஎன்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.
* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.
* நகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள்இருக்கலாம்.
* நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.
* கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.
* நீலநிறமாக மாறிவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்றுஅர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.
* நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால்இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.
* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
விரலுக்கு கிரீடமான நகங்களை கவனித்துக்கொள்வதுநலம்.
No comments
உங்கள் கருத்துக்கள்: